உள்நாடு

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2010-2015 காலப்பகுதியில் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் காலத்தில் 150 இ.தொ.கா ஊழியர்கள் கடமையில் இருந்து விடுவிக்கப்பட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடையது.

இது தொடர்பில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஐந்து வழக்குகளை தாக்கல் செய்தது. இதில் ஒரு வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா அழைப்பாணை விடுத்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு மேலதிகமாக, CWE இன் முன்னாள் தலைவர் எரா பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பதில் பணிப்பாளர் மொஹமட் ஷாகிர் ஆகியோருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

கடந்த 24 மணி நேரத்தில் 517 நோயாளிகள் : ஒருவர் பலி

பாராளுமன்றில் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றம்.