உள்நாடு

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் பிடியில்..

(UTV | கொழும்பு) – கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று காலை முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் லோட்டஸ் வீதியை மறித்து வீதி மறியல்களை அமைத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சகத்தின் நுழைவாயிலை மறித்ததாகவும் கூறப்படுகிறது.

காலி முகத்திடல் போராட்டடத்திற்கு இன்றுடன் 73 நாட்களாகின்றன.

இன்று காலை குறித்த குழுவினரை வெளியேற்ற பாதுகாப்பு படையினரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

இன்று மேலும் 414 பேருக்கு கொரோனா உறுதி

டிலான் பெரேரா எம்.பி பயணித்த கார் விபத்து – மூன்று பேர் காயம்.

தற்போதைய அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது