உள்நாடு

இந்திய கடனுதவியின் கீழ் வழங்கிய இறுதி டீசல் தொகை நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு சொந்தமான கடைசி டீசல் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், அதன் டீசல் இறக்கும் பணிகள் இன்று (16) ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இந்த கப்பலில் 40,000 மெட்ரிக் டன் டீசல் உள்ளதாகவும், டீசல் இறக்கும் பணிகள் முடிவடைய சுமார் மூன்று நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நாட்டில் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், பெட்ரோல் நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் டீசல் விநியோகிக்கப்படுகின்றது.

இதனால், பொது போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெட்ரோல் நெருக்கடி நீடிப்பதால் குறைந்த அளவிலேயே பெட்ரோல் வழங்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் 35,000 மெற்றிக் தொன் பெட்ரோலை இறக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவித்தல்

மேர்வின் சில்வா CID இனால் கைது