உள்நாடு

லிட்ரோ இன்றும் இல்லை

(UTV | கொழும்பு) – இன்று (16) உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் ஊடக வெளியீட்டாளர் வி.கேதேஷ்வரம் நேற்று (15) பிற்பகல் ஊடக சந்திப்பில், டொலர்களை செலுத்தி விடுவிக்கப்பட்ட கப்பலில் இருந்து 3,900 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

லிட்ரோ நிறுவனம் கடந்த 4ம் திகதி முதல் தொடர்ந்து 13 நாட்களாக உள்நாட்டு எரிவாயுவை வழங்காததால், எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு அருகே மக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடப்பது தொடர்கிறது.

Related posts

கொரொனோ : பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை

20 ஆவது அரசியலமைப்பு – அறிக்கை இன்று அமைச்சரவையில்

பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!