(UTV | கொழும்பு) – இன்று முதல் மீண்டும் சந்தையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் கணித்துள்ளது.
கெரவலப்பிட்டி தல்தியவத்தை கடல் எல்லையில் 7 நாட்களாக நங்கூரமிட்டிருந்த எரிவாயு கப்பலுக்கான பணம் நேற்று செலுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
3.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதுடன், கிட்டத்தட்ட 20 மில்லியன் ரூபா தாமதக் கட்டணமாக செலுத்த வேண்டியிருந்தது.