(UTV | கொழும்பு) – தம்ம அரசியல் மற்றும் இலங்கை மக்களின் ஆன்மீக நல்வாழ்வின் சாரத்துடன் இலங்கை அரசை ஒன்றிணைத்த நாளே பொசன் பௌர்ணமி தினம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொசன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தியில், பொசன் பண்டிகையை ஆன்மீக ரீதியில் அடையாளப்படுத்தும் நாளாக இலங்கை கருதுவதாக தெரிவித்தார்.
பொசன் தினத்தன்று அரஹந்த் மகிந்தவின் வருகையுடன், தர்ம உரையாடல் மற்றும் அரசியல் சமூக கலாச்சார உரையாடல் ஆகியவை தன்னிறைவு பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் கூறினார்.
இலங்கை அரசில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக-பொருளாதாரக் குழப்பங்களைத் தணிக்கக் காத்திருக்கும் ஒரு சமூகத்திற்கான பாதை வரைபடம் போன்றது அரகந்த் மகிந்த மூலம் அங்கீகரிக்கப்பட்ட தர்மத்தின் பாதை என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
உள்ளுர் மண்ணில் உணவு உற்பத்தி செய்யும் போது வேறுபாடுகள் மற்றும் கருத்தியல் ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கி வைத்து இலங்கையின் ஆட்சியை வடிவமைக்க மகிந்தவின் அறிவுரையை இந்த தருணத்தில் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.