(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8 மணிக்குள் அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுவரை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் என நீதிமன்றம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.