உள்நாடு

IMF ஆதரவு தொடர்பில் பிரதமரின் நம்பிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு விரைவில் பணம் தேவைப்படுவதாக தாம் தெரிவித்ததாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதற்கு சாதகமாக பதிலளிப்பதாக அவர் கூறினார்.

“IMF நிர்வாக இயக்குநரிடம் பேசினேன். நீங்கள் சொன்னதுதான் நானும் சொன்னேன். எங்களுக்கு பணம் தேவை என்று கூறப்பட்டது. ஏற்கனவே உள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதை சீக்கிரம் எங்களுக்கு கொடுங்கள். மற்ற நாடுகளில் இருந்து பணம் பெறலாம் என்று இங்கு ஒப்புக்கொண்டோம். இந்த வேலையை இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் முடிக்க முயற்சி செய்யலாம் என்று நம்புகிறேன்.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, அர்ப்பணிப்புடன் புதிய சிந்தனையுடன் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மேலும் கூறினார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜியோர்ஜியோவும் நேற்று (ஜூன் 7) மாலை தொலைபேசியில் உரையாடியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்யக்கூடிய வகையில், கூடிய விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்டக் குழுவிடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலான நிதி உறவுப் பேச்சுக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் விளக்கினார்.

இதற்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

‘நிலுவைத்தொகை செலுத்தப்படாவிடின் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறாது’

மீண்டும் டொலர் தட்டுப்பாடு : தேங்கி நிற்கும் எரிபொருள் கப்பல்கள்