உள்நாடு

ரஷ்யாவின் உறவினை உடைக்கும் தற்போதைய இலங்கை அரசு – மைத்திரி சாடல்

(UTV | கொழும்பு) – Aeroflot விமானம் தொடர்பான நிலைமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை தற்போதைய அரசாங்கம் கையாளும் விதம் குறித்து தாம் மிகவும் வருத்தமடைவதாக அது கூறியுள்ளது.

அவரது டுவிட்டர் செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு.

“சோவியத் காலத்தில் இருந்தே ரஷ்யா எங்கள் பழைய நண்பன். நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அந்த வரலாற்று உறவு மேலும் பலப்படுத்தப்பட்டது. ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளுக்கு தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தலாக செயற்படுகின்ற விதம் குறித்து இன்று நான் மிகவும் வருந்துகின்றேன்.

எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அஸ்பெஸ்டஸ் இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்த போது இலங்கை தேயிலை கையிருப்பில் பூச்சியொன்று காணப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது.

இதனால் இலங்கை தேயிலை தொழில் நெருக்கடியை எதிர்கொண்டது..” எனத் தெரிவிக்க்த்துள்ளார்.

Related posts

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின வரவேற்பு நிகழ்வு [VIDEO]

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு

விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் விசேட உரை