கேளிக்கை

தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்த`விவேகம்’ டீசர்

(UDHAYAM, COLOMBO) – சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள `விவேகம்’டீசர் தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்’ படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை.

எங்கு சென்றாலும் `விவேகம்’ என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு வருகிறது.

டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக வீசியுள்ளது என்று கூட சொல்லலாம்.

நேற்று நள்ளிரவு வெளியாகிய இந்த புயல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. `விவேகம்’ டீசர் வெளியாகி தற்போது வரை 70 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

நேற்று நள்ளிரவு சரியாக 12.01-க்கு வெளியான டீசர், 24 மணிநேரத்தில் 6.1 லட்சம் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.

தென்னிந்தியாவில் வெளியான படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான `கபாலி’ படத்தின் டீசர் 24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் `கட்டமராயுடு’ 57 மணிநேரத்தில் 50 லட்சமும், மூன்றாவது இடத்தில் `பைரவா’ 76 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில், 24 மணிநேரத்திலேயே 6.1 லட்சம் பார்வையாளர்களை பெற்று `விவேகம்’ புதிய சாதனை படைத்திருக்கிறது.

சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள `விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

Related posts

விஜய்சேதுபதியுடன் ஷாருக்கான் – வைரலாகும் புகைப்படம் (photo)

ஷாருக்கின் பிள்ளைகள் ஐபிஎல் ஏலத்தில்..

இளைய தளபதியை தொடர்ந்து உலக நாயகன்