(UTV | கொழும்பு) – முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எவ்வித நெருக்கடியும் இன்றி பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டி சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு ஆதரவளிக்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும், எதிர்காலத்தில் நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து முச்சக்கரவண்டித் தொழிற்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.