உள்நாடு

பொருளாதார நெருக்கடியும் பிரதமரின் இலக்கும்

(UTV | கொழும்பு) –   இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்க வெளி நாடுகளுக்கு இடையில் நிதிப் பாலத்தை அமைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கை ஒன்றே வழி என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இம்மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு கடன்கள் உட்பட ஏனைய மீளச் செலுத்தல்களுக்காக 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலக்காக நிர்ணயித்துள்ளதுடன் நாட்டின் கையிருப்பை மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூட்டு வர்த்தக சங்கம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கான உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் நன்கொடை வழங்கும் நாடுகளுடன் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த பிரதமர், ஜப்பானுடனான உறவுகள் முறிவடைந்துள்ளதாகவும், அந்த நம்பிக்கைகளை மீட்டெடுப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கட்சி மாநாடு – கொழும்பில்.

இருபது – இதுவரை 39 மனுக்கள் தாக்கல் [UPDATE]

தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மேலும் 98 பேர் வெளியேற்றம்