உள்நாடு

இறுதியிலேயே மஹிந்தவிடம் வாக்குமூலம்

(UTV | கொழும்பு) – மே மாதம் 9ஆம் திகதி #மைனாகோகம மற்றும் #கோட்டாகோகம என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (1) மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் வாக்குமூலங்களை அளிக்காமை காரணமாக, அவர்கள் இன்றைய தினம் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதால் மஹிந்த ராஜபக்ஸவின் விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பினரினதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியல்வாதிகளை அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மருத்துவ அலட்சியம் : கம்பஹா வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஊனமுற்றது

காசா மருத்துவமனை தாக்குதல் – சுமந்திரன் கண்டனம்.

வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு

editor