உள்நாடு

இலங்கையர்கள் ஹஜ்ஜில் கலந்து கொள்ள மாட்டார்கள்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இவ்வருடம் ஹஜ்ஜில் பங்குபற்றாதிருக்க தீர்மானித்துள்ளது.

இந்த வருடம் 1,585 இலங்கையர்கள் ஹஜ்ஜில் கலந்து கொள்ள முடிந்த போதிலும், டொலர் தட்டுப்பாடு காரணமாக அவர்கள் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.

தேசிய ஹஜ் குழு, ஹஜ் சுற்றுலா அமைப்பு, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட பல தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்றாவது தடுப்பூசியாக பைசர்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

தனிமைப்படுத்தலை மீறிய நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்