உள்நாடு

புகையிரதக் கட்டணமும் அதிகரிக்கப்படலாம்

(UTV | கொழும்பு) – எரிபொருள் திருத்தக் கட்டணத்திற்கு அமைவாக புகையிரதக் கட்டணமும் அதிகரிக்கப்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், மக்களுக்கு இயன்றளவு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

மைத்திரியின் மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க கோரிக்கை

மாத்தளை மாவட்டத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு