உலகம்

‘உயிரைக் கொடுத்தாவது நெருக்கடியினை தீர்ப்பேன்’

(UTV |  இஸ்லாமாபாத்) – இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள கைபர் பாக்துன்குவா மாகாணத்தில் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் தெரிவிக்கையில்;

“..கைபர் பாக்துன்குவா மாகாண முதலமைச்சர் மம்மூத் கான், 24 மணி நேரத்திற்குள் கோதுமை மாவின் விலையை 400 ரூபாய்க்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நான் எனது ஆடைகளை விற்றாவது குறைந்த விலைக்கு கோதுமை மாவை கொண்டு வருவேன்.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானில் கடு பணவீக்கம் ஏற்படும், வேலையிழப்பு ஏற்படும் என கூறி வருகிறார்.

அவர் தனது ஆட்சியின்போது 50 லட்சம் வீடுகளும், 10 லட்சம் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தருவேன் என கூறினார். ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்து நாட்டின் பொருளாதாரத்தை இக்கட்டான நிழைக்கு தள்ளியுள்ளார்.

நான் உங்கள் முன் உறுதி மொழி எடுக்கிறேன். என் உயிரை கொடுத்தாவது இந்த நாட்டை வளர்ச்சி மற்றும் செழிப்பான பாதைக்கு அழைத்து செல்வேன்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து பேசும் இம்ரான்கான்தான் மக்களுக்கு துரோகம் செய்தார். உலகம் முழுவதும் எரிபொருள் விலை உயரும்போடு அவர் பெட்ரோல் விலையை குறைத்தார். இதற்கு காரணம் அவர் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என பயம்தானே தவிர, மக்களுக்காக அதை செயவில்லை..”

Related posts

பொதுப் போக்குவரத்திற்கு தற்காலிக தடை

பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

ஈரானில் தொடரும் போராட்டம்