(UTV | கொழும்பு) – எரிபொருள் விநியோகத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையானது மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாக உள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு (UTUC) தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் கப்பலுக்கு தாமதக் கட்டணமாக பாரிய தொகை செலுத்தப்படுவதாக தெரிவித்தார்.