உள்நாடு

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிரதமரிடமிருந்து ஒரு செய்தி

(UTV | கொழும்பு) – கோட்டாகோகம செயற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக, பிரதமர் அலுவலகத்தை pmoffice.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கோட்டாகோகமவில் உள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் நாடு முழுவதும் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர்களின் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்க முடியும்.

எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள மற்றும் நடைமுறையான முன்மொழிவுகளை முன்வைக்கும் இளைஞர்கள் அல்லது குழுக்களுக்கு பிரதமரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஐந்து சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்.

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு