உள்நாடு

IMF கைகொடுக்கும் என பிரதமர் நம்பிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்க சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்தை அடுத்த மாதம் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 4 பில்லியன் அமெரிக்க டாலர் கடனை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

மேலும், சீனா மற்றும் ஜப்பானில் இருந்தும் கடன் நிவாரணம் எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

கடனைப் பெற்ற பின்னர், எரிபொருள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான பிரச்சினைகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் பணவீக்கம் எதிர்காலத்தில் 40 சதவீதமாக உயரக்கூடும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடியைத் தணிக்க செலவுக் குறைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

2025 ஆம் ஆண்டளவில் 1 வீத முதன்மை உபரியை பேணுவதே அல்லது அதனை மீறுவதே தமது இலக்கு எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்