(UTV | கொழும்பு) – முற்போக்கு அரசியல் கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, எதிர்கால தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணியை பதிவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சட்ட அந்தஸ்து வழங்கும் கூட்டணியை பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.
புதிய அமைச்சரவை மற்றும் பிரதமர் குறித்து வினவியபோது, தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாட்டிற்கு ஒரு நிர்வாகம் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தெரிவித்தார்.
சில நபர்கள் நாட்டுக்கு பாதகமான முடிவுகளை எடுப்பது குறித்து அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர். இன்னும் கபுடாஸ் அவரது வேலையினை தொடர்ந்து செய்கிறார் எனவும் தெரிவித்திருந்தார்.
சில முன்னாள் அமைச்சர்கள் தமது நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இன்னமும் ஆற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவர்கள் தலையிடுவதைத் தடுக்கும் வகையில், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதைத் தடுக்கும் விதிகள் போன்ற அரசியலமைப்பின் 19வது திருத்தத்தில் உள்ளடங்கிய ஷரத்துகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு தமது தரப்பு அழுத்தம் கொடுக்கிறது என்றார்.