உள்நாடு

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டது

(UTV | கொழும்பு) –   நேற்று (24) வரை நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் நுகர்வோரின் அச்சுறுத்தல் காரணமாக எரிபொருளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து மூடப்பட்டுள்ளன.

இந்த நிரப்பு நிலையங்களில் ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் இருப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார். எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு மேலதிக ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என செயலாளர் சுட்டிக்காட்டினார்.

Related posts

புதிய சுகாதார ஊழியர்களுக்கு விசேட பயிற்சி – சுகாதார சேவைகள் பணிமனை.

போதை பொருள் – தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

தபால் நிலையங்களின் சேவைகள் இடைநிறுத்தம்