(UTV | கொழும்பு) – எரிபொருளின் விலைகளில் இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிப்பொன்றை இலங்கை அறிவித்துள்ளது.
அந்தவகையில் ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலையானது லீட்டரொன்றுக்கு 338 ரூபாயிலிருந்து 82 ரூபாயால் அதிகரித்து 420 ரூபாயாகக் காணப்படுகிறது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலையானது லீட்டரொன்றுக்கு 373 ரூபாயிலிருந்து 77 ரூபாய் அதிகரித்து 450 ரூபாயாகக் காணப்படுகின்றது.
ஓட்டோ டீசலின் விலையானது லீட்டரொன்றுக்கு 289 ரூபாயிலிருந்து 111 ரூபாய் அதிகரித்து 400 ரூபாயாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில், சுப்பர் டீசலின் விலையானது லீட்டரொன்றுக்கு 329 ரூபாயிலிருந்து 116 ரூபாய் அதிகரித்து 445 ரூபாயாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில், எரிபொருள் விலை மாற்றமானது இறக்குமதி, இறக்குதல், விநியோகித்தல், வரிகளை உள்ளடக்கியே விலை மாற்றமிருப்பதாகத் தெரிவித்த சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலாபம் கணக்கிடப்படவில்லை எனவும் உள்ளடக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், லங்கன் இந்தியன் ஒயில் நிறுவனமும், சிபெட்கோ எரிபொருட்களுக்கு ஒத்தவாறு எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.