உள்நாடு

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் ஒக்டேன் 95 பெட்ரோல்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் அடுத்த சில நாட்களில் பெட்ரோல் விநியோகம் தொடர்பான புதிய எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒக்டேன் 95 பெட்ரோல் விநியோகிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த 6 வாரங்களுக்கு 95 பெட்ரோல் கையிருப்புகள் வசதியாக கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

தேவையான எரிபொருளைக் கொண்ட இரண்டு சரக்குக் கப்பல்கள் இறக்கப்பட்டுள்ளதால் இது சாத்தியமாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

95 பெட்ரோலை பயன்படுத்துபவர்கள் 92 பெட்ரோலை பெற வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

95 பெட்ரோலை நாளை முதல் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது எரிபொருள், குறிப்பாக பெட்ரோலை கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Related posts

‘அரசின் கட்டுப்பாடுகள் எமக்கு பொருந்தாது’ – IOC அதிரடி தீர்மானம்

ஹெலிகொப்டர் விபத்து – விசாரணைக்கு விசேட குழு நியமனம்

இலங்கையில் உயரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை