உள்நாடு

கொழும்பிற்கு 10 மணிநேர நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி (சனிக்கிழமை) இரவு 10.00 மணி முதல் மறுநாள் (22 ஆம் திகதி) காலை 8.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

இந்த திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 1 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளுக்கு நீர் குறைந்த அமுக்கத்தில் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 674 : 06 [COVID UPDATE]

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

மார்க்க எண் 120 பேருந்து வேலை நிறுத்தத்தில் உள்ளது