(UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதால் பேக்கரி தொழிலுக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோதுமை மாவை வழங்கும் இரண்டு பிரதான நிறுவனங்களில் ஒன்று நேற்று கோதுமை மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி காரணமாக பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.