உள்நாடு

சமன் லால் CID இனால் கைது

(UTV | கொழும்பு) – மொரட்டுவை நகர சபையின் மேயர் சமன் லால் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று குறித்த பிரிவில் சரணடைந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

அனைத்து நீதிமன்றங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கோடிக்கணக்கில் பணமோசடி செய்த திலினி பிரியமாலிக்கு பிணை