உள்நாடு

மேலதிக வகுப்புக்களுக்கான தடை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டமை நேற்று (17) நள்ளிரவு முதல் முடிவடையத் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய பாதகமான சூழ்நிலை காரணமாக பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தடை உத்தரவு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

கடவுச்சீட்டு அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்

அதிக விலைக்கு டைல்ஸ் விற்பனையா? அறிவிக்க தொலைபேசி இல

‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற இலட்சியத்துடன் முன்னேறுவோம்