உள்நாடு

சமையல் எரிவாயுக்காக வரிசையில் நிற்க வேண்டாம்

(UTV | கொழும்பு) – உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறைந்தது மூன்று நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக திட்டமிட்டபடி நேற்றைய தினம் எல்பி எரிவாயுவை ஏற்றிச் செல்ல முடியவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே விநியோகம் குறைந்தது மூன்று நாட்கள் தாமதமாகும் எனவும், பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

தற்போது வரையில், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 7 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் டன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன. எனினும் சீரற்ற வானிலை காரணமாக முழுமையாக தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளன.

இதேவேளை, 3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜோன்ஸ்டனின் BMW கார் தொடர்பில் வௌியான தகவல்கள்

editor

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!