(UTV | கொழும்பு) – ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று (17) பாராளுமன்றம் கூடவுள்ளது.
அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜித் ராஜபக்ஷவின் பெயரும், ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் ரோஹினி கவிரத்னவின் பெயரும் இப்பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும் இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீட்டிலும் மாற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அது தொடர்பில் உரிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என கட்சித் தலைவர்கள் அண்மையில் தீர்மானித்திருந்தனர்.
இதேவேளை இன்று பாராளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.