உள்நாடு

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி

(UTV | கொழும்பு) – தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஆபத்தில் உள்ள இலங்கையின் குழந்தைகள் மற்றும் விவசாயிகளுக்கு உதவ நியூசிலாந்து அரசாங்கம் $500,000 நிதியுதவியை அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் நனாயா மூட்டா டுவிட்டர் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து நியூசிலாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதன்படி, உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இந்த நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான 30 வருட கூட்டுறவை அந்த காலப்பகுதியில் நியூசிலாந்து 25.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி உதவியாக இலங்கைக்கு வழங்கியதன் மூலம் மேலும் வலுவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

Related posts

வனுஷி நியூசிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

editor

இன்று மின்துண்டிப்பு இல்லை