உள்நாடு

உரப் பிரச்சினைக்கு இந்தியாவிடமிருந்து உறுதிமொழி

(UTV | கொழும்பு) – இலங்கையின் சிறுபோக பயிர்ச் செய்கைக்காக, 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை வழங்க இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி எல்லையின்கீழ், இந்த உரம் வழங்கப்படவுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, அந்த நாட்டு உரத் திணைக்களத்தின் செயலாளர் ராஜேஸ் குமார் சதுர்வேதியை கடந்த தினம் சந்தித்துள்ளார்.

இதன்போது, இந்தியாவின் தீர்மானம் அறிவிக்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பினால் பேக்கரி தொழில் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் சுமார் 10,000 ஹோட்டல்களுக்கு பூட்டு

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று