(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் பதவியை பொறுப்பேற்பார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை அறிவித்துள்ளார்.