(UTV | கொழும்பு) – இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறைக்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வுகளை காணுமாறு அனைத்து இலங்கையர்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்துகிறது.