உலகம்

பொது இடங்களில் பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும்

(UTV |  காபூல்) – பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்று தலிபான் ஆணை பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான் அதிரடி கட்டளையை விதித்துள்ளது.

இதுகுறித்து தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பிட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:-

“.. பெண்கள் அனைவரும் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை பொது இடங்களில் அணிய வேண்டும். அது பாரம்பரியமானது மற்றும் மரியாதைக்குரியது.

வாலிபர்களை சந்திக்கும்போது தேவையில்லாத கோபங்களைத் தவிர்ப்பதற்காக ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்..” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

இந்தியாவில் 2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

காற்பந்துப் போட்டி – யுத்தக்களமாக மாறிய மைதானம்.

 கொரோனா வைரஸ் காரணமாக  சிங்கப்பூரின் பொருளாதாரம் வீழ்ச்சி