உள்நாடு

நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்க திகதி வழங்குமாறு கோரி சபாநாயகர் அலுவலகம் முற்றுகை [VIDEO]

(UTV | கொழும்பு) –  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

அப்போது சபாநாயகரும் சபாநாயகர் அலுவலகத்தில் இருந்ததால், தங்கள் கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்பிப்பதற்கான திகதியை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது அங்கிருந்தனர்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளும் சபாநாயகர் அலுவலகத்திற்கு வந்ததையடுத்து, நம்பிக்கையில்லா பிரேரணைக்கான திகதியை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் பலமுறை வலியுறுத்தினர்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

ஒரு பில்லியன் கடன் கோரி பசில் இந்தியாவுக்கு

லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலைகள் அதிகரிப்பு