(UDHAYAM, COLOMBO) – சூரியவௌ பிரதேசத்தில் சூரிய சக்தியில் செயற்படும் மின்சார வேலியை இலங்கை கடற்படை நிர்மாணித்துள்ளது.
கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன பணிப்புரைக்கமைவாக இந்த செயற்றிட்டம் இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான நிபுணத்துவ பிரிவினால் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மின்சார வேலி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியான சமூக நலத்திட்டங்களின் ஒருபகுதியாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் அப்பகுதியில் நிலவி வரும் காட்டு யானைகள் மற்றும் கிராம வாசிகளிடையே நிலவி வரும் இடர்களை தவிர்க்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது.
இதன்மூலம் காட்டு யானைகளின் அட்டகாசங்களில் இருந்து மனித உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.