உள்நாடு

மே 06 : நாட்டுக்காக ஒரு நாள், ஹர்த்தால் அமைப்பின் வேண்டுகோள்

(UTV | கொழும்பு) – நாளைய (06), ஹர்த்தாலின் போது, எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த அறிவிப்பை தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் வெளியிட்டது.

அதன்படி,

– அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை மத ஒலிபரப்பினை வழங்குதல்.

– காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை, எதிரே வரும் வாகனங்களின் ஹாரன்களை தொடர்ந்து ஒலிக்க வேண்டும்.

– வீட்டின் முன் கருப்பு கொடி ஏற்றுங்கள்.

– அருகிலுள்ள வீதிகளில் ஒன்று கூடுங்கள். தங்களது உணவு வேளைகளை அங்கே கூட்டாக பகிர்ந்து கொள்ளுங்க.

– அத்தியாவசிய சேவைகளை வழங்கும்போது சீருடை அணிவதை தவிர்க்கவும்.

– முடிந்தவரை கருப்பு ஆடையினை அணியுங்கள்

– பொது சொத்துக்களை சேதப்படுத்தாதீர்கள்.

– வன்முறை நடத்தைக்கு அனுமதிக்காதீர்கள்

எதிர்வரும் 6ஆம் திகதி 24 மணித்தியால ஹர்த்தாலுக்கும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கூட்டுப் பணிப்பகிஷ்கரிப்புக்கும் பதில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி அரசாங்கம் வீடு செல்லும் வரை தொடர் வேலை நிறுத்தமும் தொடர் ஹர்த்தாலும் ஆரம்பிக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

சற்றுமுன் புதிதாக 9 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் தீ விபத்து

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்