உள்நாடு

பிரதமரின் விசேட அறிக்கை இன்று அல்லது நாளை இடம்பெறும்

(UTV | கொழும்பு) – பிரதமர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் பிரதமர் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பிரதமருக்கு பதவி விலகும் எண்ணம் இல்லை.

இந்த விசேட அறிக்கை இன்று அல்லது நாளை இடம்பெறலாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனவே, பிரதமர் பதவி விலகத் தயாராக இருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்ட வேளையில் பாராளுமன்றத்திற்கு புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு பொருத்தமான நபர் தெரிவு செய்யப்படுவார் என சபாநாயகர் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் ஒருவரை நியமிப்பது பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலின் முதல் பணியாகும் என அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.

பதவிக்கு போட்டி ஏற்படும் பட்சத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் அரசாங்க பாராளுமன்ற குழு இன்று காலை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியல் பழிவாங்கல்கள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

ஜனாதிபதி- மலேசிய பிரதமருக்கிடையில் சந்திப்பு.

பாராளுமன்றினை மீள கூட்டும் அதிகாரம் தொடர்பில் பந்துல கருத்து