வகைப்படுத்தப்படாத

2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறை புதிய யுகம் படைக்கும்

(UDHAYAM, COLOMBO) – ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10வது மாநாடு  இன்று வியட்நாம் ஹனோயில் இடம்பெறுகின்றது, சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் உட்பட 300க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று 18ம் திகதி முதல் 21ந் திகதி வரை இம்மாநாடு இடம்பெறும். குறிப்பாக கூட்டுறவுத்துறையை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறையை புதிய யுகம் படைக்கும் என்ற தொணிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது. சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கையிலுருந்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், கிழங்குமாகாண கூட்டுறவு மற்றும் விவசாய அமைச்சர் துறை ராஜசிங்கம் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்

 

Related posts

ගම්පහ දිස්ත්‍රික්කයේ ප්‍රදේශ රැසකට ජලය කප්පාදුවක්

ISIS அமைப்புடன் தொடர்புடைய 155 பேர் கைது

நுவரெலியாவில் வீசிய பலத்த காற்றால் 21 வீடுகள் சேதம்