(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகபூர்வ மட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டு மாதங்களுக்குள் அதிகாரிகள் மட்டத்தில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்படும் என்று நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
இந்த கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், சில கலந்துரையாடல்களை இணையத்தளத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இரண்டு மாதங்களுக்குள் வெற்றிகரமான முடிவை எட்டும் என அண்மையில் நம்பிக்கை வெளியிட்டார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் உரையாற்றிய அவர், இதற்கான மேக்ரோ கொள்கை கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தார்.