உள்நாடு

தற்போதைய நெருக்கடி நிலைமை : நீடிக்கும் கலந்துரையாடல்கள்

(UTV | கொழும்பு) –  தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற குழுவினருக்கும் இடையில் இன்று மீண்டும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கொள்கை ரீதியாக இணங்கி கடந்த வாரம் கட்சித்தலைவர்களுக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகள், ஏனைய கட்சிகள் இல்லாத கூட்டமொன்றை நடத்துவதற்கு தமது இணக்கப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தன.

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் தடவையாக குறித்த குழுவினர் ஜனாதிபதியுடன் சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டாயம் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும். எமது உரிமைகளைப் பறிக்க எவருக்கும் அதிகாரம் இல்லை: மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இன்றும் மழை

MT New Diamond : நட்டஈடு வழங்க இணக்கம்