உள்நாடு

தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) –  இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த சங்கத்தின் இணைச் செயலாளர் டீ.பி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் கட்டணம் அதிகரிப்புக்கு ஏற்றவகையில் தாங்கி ஊர்திக்கான கட்டணத்திலும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அந்த சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் நேற்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்ட வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கடமைக்கு திரும்பாக எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான அனுமதியை இரத்து செய்யுமாறு இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எரிபொருளை கொண்டு செல்வதற்காக புதிய விநியோகஸ்தர்களுக்கான அனுமதியை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் அனுமதி

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு

கொவிட் 19 மத்திய நிலையமாக தேர்தல்கள் ஆணைக்குழு