வகைப்படுத்தப்படாத

சாக்குடியரசின் மாதிரிக்கட்டமைப்பு ஜனாதிபதி தலைமையில் திறப்பு

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை கஹபொல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சாக்ய குடியரசின் மாதிரி கட்டமைப்பிற்குரிய முதல் பகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந்து வைத்தார்.

புத்தபெருமான் அவதரித்த லும்பினி உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை உள்ளடக்கும் வகையில் சாக்ய குடியரசின் மாதிரி வடிவம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐநா சர்வதேச வெசாக் தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஆரம்பமானது.

தொன் சைமன் விஜயவிக்ரம சமரக்கோன் என்ற கொடையாளி வழங்கி 78 ஏக்கர் காணியில் கட்டமைப்பு 50 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புத்த பெருமான் வாழ்ந்த சாக்ய குடியரசின் சகல அம்சங்களையும் உள்ளடக்கியதாக தத்ரூபமான வகையில் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக கஹபொல பிரதேச வளாகத்தில் சகல வசதிகளையும் கொண்ட பௌத்த நிலையம், நூலகம், தியான மண்டபம், சைவ உணவகம், ஓய்வறை, பார்வையாளர் மண்டபம் முதலான வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாதிரி சாக்ய குடியரசின் நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி, அங்கு அமைக்கப்பட்டுள்ள லும்பினி பூங்காவில் சல் மரக்கன்றையும் நாட்டினார்.

சாக்ய குடியரசின் நிர்மாணப் பணிகளில் பங்களிப்பு நல்கிய சகலருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சங்கைக்குரிய திருகுனாமலயே ஆனந்த தேரர், சங்கைக்குரிய கோனதுவே குனானந்த நாயக்க தேரர் உள்ளிட்ட நேபாளம், பூட்டான், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகா சங்கத்தினர், அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, பாட்டலி சம்பிக்க ரணவக்க, பிரதி அமைச்சர் சாரதீ துஷ்மந்த மித்ரபால, கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க, புத்த சாசன அமைச்சின் செயலாளர் சந்திரபிரேம கமகே, லைட் ஒப் ஏசியா மன்றத்தின் தலைவர் நவீன் குணரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

BAR briefed on SOFA, MCC & Land Act

அரசியல் உரிமை போராட்டத்துடன் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதும் அவசியமாகிறது மு சந்திரகுமார்

மென்செஸ்டரில் இடம்பெற்ற தாக்குதலால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை