உள்நாடு

“அதுவும் ஒன்றும் இதுவும் ஒன்று”, ஆனால் நாம் வேறுபட்டது

(UTV | கொழும்பு) – “அதுவும் ஒன்றும் இதுவும் ஒன்று” எனும் தொனி ஐக்கிய மக்கள் சக்திக்கு பொருந்தாது எனவும், பாரம்பரிய எதிர்க்கட்சிக்கு பதிலாக ஐக்கிய மக்கள் சக்தி நவீன அரசியல் இயக்கமாக செயற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சுத் திட்டத்திற்கு (ஹுஸ்மக்) அமைவாக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

225 பேரும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என சிலர் கூறியிருந்த போதிலும், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரையும் குறித்த அந்த கூற்று சரியானதல்ல என எதிர்கட்சித் தலைர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய உபகரணங்களை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி என்ற முறையில் செயற்பட்டதாகவும் சிலர் இந்த நற்செயலை பயனற்றதாகக் கருதுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தரவுகள் மற்றும் விஞ்ஞான காரணங்களின் அடிப்படையிலான தெளிவான வேலைத்திட்டத்தில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய மக்கள் சக்தியின் அந்த வேலைத்திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

இன்று உச்சத்தை அடையும் வளியின் தரக்குறியீடு

சர்ச்சைக்குரிய சீன உரக்கப்பல் விவகாரத்தில் தவறு நடந்துள்ளது : தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு

தனிமைப்படுத்தலில் இருந்து இதுவரை 8099 பேர் வீட்டிற்கு