உள்நாடு

ஜனாதிபதியின் இலக்கு

(UTV | கொழும்பு) –   இந்த முக்கியமான காலகட்டத்தில் நமது பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவையும் உதவியையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

ஜப்பானின் குமாமோட்டோவில் இன்று (23) முற்பகல் இடம்பெற்ற 4வது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தொற்றுநோய் மோசமடைந்துள்ளதாகவும், தற்போதைய நிதி நெருக்கடியின் விளைவாக வளங்களுக்கான இடம் குறிப்பிடத்தக்க அளவில் தடைபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நீர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்காகும்.

இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் ஜப்பான் உட்பட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 48 நாடுகளின் அரச மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Related posts

சனத் நிஷாந்தவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே இராஜினாமா

கைப்பற்றப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் மாற்றம்