(UTV | கொழும்பு) – இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகளும் சத்திரசிகிச்சை உபகரணங்களும் எதிர்வரும் புதன்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தோனேசிய அரசாங்கத்திடம் இருந்து 340 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.