(UTV | கொழும்பு) – இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, அதற்கான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு 3 முன்னணி சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
அதன்படி, Ayres Investment Management LLP, DecisionBoundaries LLC மற்றும் Perella Weinberg LP ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு உள்ளீர்க்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது.