உள்நாடு

மின்துண்டிப்பு குறித்த அட்டவணை

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றும் நாளையும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் 3 மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிப்படவுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும்

மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் நாளைய தினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,

மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்துண்டிப்பு அட்டவணை

Related posts

மைத்திரி – ரணிலிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு

“ஜூலை 9-ம் திகதி தொடங்கிய படத்தின் முதல் சீசன் இன்னும் முடிவடையவில்லை”

இன்று ஜனாதிபதி தலைமையில் சர்வ கட்சி கூடுகிறது!!