உள்நாடு

“மத்திய வங்கியை இரத்து செய்யவும், இன்றேல் IMF கடன்களும் சாக்கடையில் வீசப்பட்டது போன்றுதான்”

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியை இரத்து செய்யாவிட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் கூட சாக்கடையில் வீசப்படும் நிலை தான் என உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியருமான ஸ்டீவ் ஹாங்க் கூறுகிறார்.

ஜனவரி 1, 2022 முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட 48% குறைந்துள்ளதாக அவர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வருடாந்த பணவீக்கம் 120% ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அவசர நிதி உதவியை கோரியுள்ளதாகவும், மத்திய வங்கி அதனை இரத்து செய்யாத வரையில் இலங்கையின் பொருளாதாரம் மரணத்தை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தணிக்க 1884 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரையில் இருந்ததைப் போன்று இலங்கை மத்திய வங்கியை நீக்கி நாணயச் சபையொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் முன்னதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

 

  • மொழிபெயர்ப்பு : ஆர்.ரிஷ்மா  

Related posts

ரயிலுடன் கார் மோதியதில் 02 பலி

இராஜாங்கணை தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாகுபாடு : குற்றச்சாட்டுக்களை பொலிஸ் தலைமையகம் நிராகரிப்பு