(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வரைபடத்தை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான தனது கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கூறிய எதிர்க்கட்சித்தலைவர், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அதற்கான வரைபடத்தை ஏன் முன்வைக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
“டாலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசு நாட்டின் காணிகளை விற்கப் திட்டமிடுகிறது. இது அரசாங்கத்தின் வரைபடமா? இந்த அரசாங்கத்திடம் இன்று வரைபடமே இல்லை. ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூறுகிறது. மற்றொரு குழு பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறுகிறது, இது அரசாங்கத்தின் சாலை வரைபடமா? இது ஒரு அரசியல் சூதாட்டம்” என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.